"மனசிலாயோ நான் தான் வர்மன்!"- சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் பட மிரட்டலான வில்லன் விநாயகனின் முதல் ஸ்பெஷல் பேட்டி! வைரல் வீடியோ இதோ

ஜெயிலர் பட வில்லன் விநாயகன் முதல் முறை பேசிய ஸ்பெஷல் வீடியோ,jailer movie villain vinayagan first special interview | Galatta

முதல் முறையாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்து உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகள் படைத்திருக்கும் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வில்லனாக மிரட்டலான வர்மன் என்னும் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் விநாயகன் நடித்திருக்கிறார். படத்தின் முதல் காட்சியிலிருந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த விநாயகனின் கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் முதல் முறையாக நடிகர் விநாயகன் ஜெயிலர் திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்ட வீடியோவை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், “மனசிலாயோ நான் தான் வர்மன்…” என பேச தொடங்கிய நடிகர் விநாயகன்... ஜெயிலர் படத்திற்குள் முதல் அடி எடுத்து வைத்தது பற்றி பேசும்போது, “அந்த சமயத்தில் நான் காட்டுப்பகுதியில் இருந்தேன் 10 - 15 நாட்கள் அங்கு இருந்தேன். அப்போது ஃபோன் எல்லாம் கட்டாகி இருந்தது. திரும்ப வரும் பொழுது போனில் நிறைய மிஸ்டு கால்கள் காட்டியது. அப்போது என்னுடைய மேனேஜர் கூப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நம்பரில் இருந்து போன் வருகிறது என.. திரும்ப நான் வந்து போன் செய்து பார்த்தபோது ப்ரொடக்ஷனில் இருந்து இப்படி ஒரு படம் ரஜினி சார் ஹீரோவாக நடிக்கும் ஒரு படம் நெல்சன் இயக்குகிறார் என்று சொன்னார்கள். அதன் பிறகு எதுவும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை ரஜினி சார் பின்பு எனக்கு தெரிந்தவர் இந்த இயக்குனர் நெல்சன் அவர் ஸ்ட்ரக்சர் சொல்லிவிட்டார். “நீங்கள் தான் முக்கியமான வில்லன்” என்று சொல்லிவிட்டார். முதலில் ரஜினி சார் - சன் பிக்சர்ஸ் அதுதான் இந்த படத்தில் நான் எடுத்து வைத்த முதல் அடி…”  என்றார். 

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு நடித்த அனுபவம் குறித்து பதிலளித்த அவர், “வார்த்தைகளில் சொல்ல முடியாது அவ்வளவு பெரிய ஆரா இருக்கிற ஒரு ஆளிடம்.. தொட முடியாத லெவலில் இருக்கும் அவர் என்னை அப்படியே சேர்த்து அவ்வளவு எனர்ஜி கொடுத்து, இந்த கதாபாத்திரம் இந்த அளவுக்கு பேசப்படக் காரணம் ஒரே ஒரு மனுஷன் ஒரே ஒரு பாபா ரஜினி சார்” என கையெடுத்து கும்பிட்டார். தொடர்ந்து தன்னுடைய வர்மன் கதாபாத்திரம் குறித்து பேசியபோது, "முதலில் இந்த கேரக்டரை நான் கேட்டபோது, நெல்சன் சார் சொல்லும்போது நான் வழக்கமாக ஸ்கிரிப்ட் கேட்க மாட்டேன் சில விஷயங்களால் ஸ்கிரிப்ட் மாறலாம். இந்த வர்மன் கேரக்டர் எப்படி வீட்டை விட்டு வெளியில் போக முடியாத அளவிற்கு ஒரு ஹிட்டானது. என்பதை "சொப்பனத்தில் போலும் யோசிக்கல சார்" என இந்த படத்தில் இருக்கும் டயலாக் மாதிரி ஆகிவிட்டது.” என்றார். இன்னும் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் விநாயகன் அவர்களின் அந்த ஸ்பெஷல் வீடியோ இதோ…
 

Actor Vinayakan speaks about his iconic character "Varman" and more 😎 Manasilayo!

Mega Blockbuster #Jailer in theatres near you! @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabupic.twitter.com/6P7X1i8E6e

— Sun Pictures (@sunpictures) September 6, 2023