சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட செம்ம சர்ப்ரைஸ்... நரசிம்மாவாக மிரட்டிய சிவராஜ்குமாரின் அதிரடி வீடியோ இதோ!

சூப்பர் ஸ்டாரின் ஜெய்லர் படத்திலிருந்து சிவராஜ்குமாரின் தீம் வெளியானது,rajinikanth in jailer movie narasimha theme video shivarajkumar | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரை பயணத்தில் மற்றும் ஒரு மணி மகுடமாக இமாலய வெற்றி பெற்றிருக்கும் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து அட்டகாசமான ஸ்பெஷல் வீடியோ ஒன்றை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். ஒட்டுமொத்த இந்திய திரை உலக ரசிகர்களும் கொண்டாடும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆக இரண்டு வாரங்களிலேயே 525 கோடிகளுக்கு மேல் வசூலித்த ஜெயிலர் திரைப்படத்தின் முழு வசூல் விவரம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இமாலய வெற்றிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 ரக காரை கலாநிதி மாறன் அவர்கள் பரிசளித்தார். தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு போர்ஷே ரக காரை பரிசளித்தார். ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த அத்தனை அதிரடியான ஸ்டைலான அம்சங்கள் அனைத்தும் நிறைந்த ஜெயிலர் திரைப்படம் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அமேசான் பிரைம் வீடியோவிலும் ரிலீஸாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து சர்ப்ரைஸ் வீடியோவாக படத்தில் நரசிம்மா என்ற கௌரவ வேடத்தில் நடித்த சிவராஜ்குமார் அவர்களின் தீம் மியூசிக்கை வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் படத்தில் மிக குறுகிய இடங்களில் மட்டும் தோன்றினாலும் ஒட்டுமொத்த திரையரங்கையும் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர வைத்தனர் என சொல்லலாம். அதிலும் குறிப்பாக சிவராஜ்குமார் அவர்களின் கதாபாத்திரம் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் ஸ்டாரின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம்  "அங்க மூணாவதா ஒருத்தன் இருப்பானே?" என சொன்னதும் சிவராஜ்குமார் சுருட்டு பிடித்தபடி நடந்து வரும் அந்த காட்சியும் டிஷ்யூ பேப்பரை நகர்த்தி விடும் பிரேமும் சொல்வதற்கு சாதாரண காட்சியாக இருந்தாலும் சிவராஜ் குமாரின் அந்த லுக்கும் நெல்சன் அதை படமாக்கிய விதமும் ரசிகர்களை கொண்டாட வைத்தது என்று சொல்லலாம். அப்படி ரசிகர்கள் கொண்டாடிய சிவராஜ் குமார் கதாபாத்திரத்தின் தீம் மியூசிக் & வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டது. ஜெயிலர் படத்தின் அந்த மாஸான வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.