கேன்சர் நோயாளிகளின் சிகிச்சைக்கு ரூ60 லட்சம் நிதி உதவி வழங்கிய சன் பிக்சர்ஸ்... தொடரும் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் வெற்றி கொண்டாட்டம்!

ஜெயிலர் பட வெற்றி கேன்சர் நோயாளிகள் சிகிச்சைக்கு உதவும் சன் பிக்சர்ஸ்,Sun pictures donates 60 lakhs to adyar cancer institute jailer success | Galatta

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் கேன்சர் நோயாளிகளுக்கான சிகிச்சைக்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் 60 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளது. எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் எனக்கு சொல்லும் அளவிற்கு தனது திரைப்பயணத்தில் 47 ஆண்டுகள் கடந்தும் தனது 73 வயதில் இண்டஸ்ட்ரி ஹிட்டாக ஜெயிலர் படத்தை கொடுத்து தான் ஒரு பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்பதை நிரூபித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் முதல்முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன்  ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசான ஜெயிலர் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இரண்டு வார இறுதியில் 525 கோடிக்கு மேல் வசூலித்த ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் இண்டஸ்ட்ரி ஹிட்டாக சாதனை படைத்தது. திரையரங்குகளில்  வெற்றிகரமாக 25 நாட்களை கடந்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாக உள்ளது. முன்னதாக ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றியை கொண்டாடும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரை பரிசளித்த கலாநிதி மாறன் அவர்கள் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு PORSCHE காரை பரிசளித்தார். 

இதன் தொடர்ச்சியாக ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாய் 100 வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளின் இறுதி அறுவை சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாயை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கிறது. அதே போல் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் கேன்சர் நோயாளிகளின் சிகிச்சைக்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் 60 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறது. ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில்  முதலில் நூறு குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய சன் பிக்சர்ஸ் தொடர்ந்து தற்போது கேன்சர் நோயாளிகளுக்கும் உதவி கரம் நீட்டி இருப்பது தற்போது அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் திருமதி.காவேரி கலாநிதி மாறன் அவர்கள், அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவர்களிடம் 60 லட்சம் ரூபாய் காசோலை வழங்கிய புகைப்படம் இதோ…
 

On behalf of Sun Pictures, Mrs. Kavery Kalanithi handed over a cheque of Rs.60 Lakhs to Dr. Kalpana Balakrishnan and Dr. Hemanth Raja, Executive Vice Chairman, Adyar Cancer Institute towards treatment of under privileged patients.#Jailer#JailerSuccessCelebrations pic.twitter.com/8AmpCyRh8C

— Sun Pictures (@sunpictures) September 7, 2023