உலக அளவில் பல கோடி சினிமா ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தனது நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார். மேலும் படத்தில் பணியாற்ற உள்ள மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த சில தினங்களில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக ஆளுநர் திரு.R.N.ரவி அவர்களை மரியாதை நிமித்தமாக ராஜ்பவனில் நேரில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் ஆளுநர் உடனான இந்த சந்திப்பு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த சந்திப்பில் அரசியல் தொடர்பான சில விஷயங்களை பேசியதாக தெரிவித்த ரஜினிகாந்த் அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் "மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து எதிர்பார்க்கலாமா" என கேட்க, ரஜினிகாந்த் அவர்கள்  இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆளுநரை நேரில் சந்தித்த புகைப்படங்கள் இதோ…
 

#SuperstarRajinikanth met H'onable Governor of Tamil Nadu Thiru. R.N. Ravi at Raj Bhavan today#superstar #rajinikanth #governor #tamilnadu #rajbhavan @V4umedia_ pic.twitter.com/c7cLAWsfc1

— RIAZ K AHMED (@RIAZtheboss) August 8, 2022