ஆல் செட் ரிலீசுக்கு ரெடி... விருமன் குறித்து யுவன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!
By | Galatta | August 08, 2022 14:07 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதியும், இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சர்தார் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி வெளியீடாகவும் அடுத்தடுத்து உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
இதனிடையே இயக்குனர் முத்தையா இயக்கத்தில் பருத்திவீரன் & கொம்பன் படங்களின் வரிசையில் கிராமத்து கதை களத்தில் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் விருமன். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள விருமன் திரைப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி, சிங்கம்புலி, இளவரசு, வடிவுகரசி, R.K.சுரேஷ், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
செல்வக்குமார்.S.K ஒளிப்பதிவில் விருமன் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூர்யா & ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
சமீபத்தில் விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் விருமன் படத்தின் இறுதிக்கட்ட இசைக்கோர்ப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டதாக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தற்போது அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…
Wrapped & delivered #Viruman Re-recording. Catch the movie in theaters with family and friends from 12th Aug. Bonus tracks coming your way! ☺️@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @AditiShankarofl @2D_ENTPVTLTD @SonyMusicSouth
— Raja yuvan (@thisisysr) August 8, 2022