சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட அட்டகாசமான சர்ப்ரைஸ்... தமன்னாவின் துள்ளலான நடனத்தில் காவாலா வீடியோ பாடல் இதோ!

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட காவாலா வீடியோ பாடல் வெளியீடு,super star rajinikanth in jailer movie kaavaala video song out now | Galatta

திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து தமன்னாவின் தொழலான நடனத்தில் காவாலா வீடியோ பாடல் வெளியானது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன் திரை பயணத்தில் 47 ஆண்டுகள் கடந்த போதும் அவர்கள் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த வகையில் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கவுரவ வேடத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் #தலைவர்170 படத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் #தலைவர்170 படத்தின் படப்பிடிப்பு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்ததாக இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் #தலைவர்171 திரைப்படத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் பெரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இதனிடையே முதல்முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.

அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜெயிலர் திரைப்படம் இரண்டு வார இறுதியில் 525 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றில் இண்டஸ்ட்ரி ஹிட்டாக சாதனை படைத்தது. வெற்றிகரமாக திரையங்குகளில் 25 நாட்களை கடந்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்திலிருந்து காவாலா பாடலின் வீடியோ பாடல் வெளியானது. முன்னதாக வெளிவந்த காவாலா பாடலின் லிரிக் வீடியோவே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று ட்ரெண்டிங் ஹிட்டானது. இதுவரை யூடியூபில் 178 மில்லியன் பார்வையாளர்களை லிரிக் வீடியோ கடந்துள்ள நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த காவாலா வீடியோ பாடல் சப்ரைஸாக தற்போது வெளிவந்துள்ளது. தமன்னாவின் துள்ளலான நடனத்தில் வந்த காவாலா வீடியோ பாடல் இதோ…