ஷாருக்கானின் ஜவான் படத்தில் தளபதி விஜயின் CAMEO இருக்கா? இல்லையா?- உண்மையை உடைத்த ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசுவின் பதில் இதோ!

ஜவான் படத்தில் தளபதி விஜயின் Cameo பற்றி பேசிய அனல் அரசு,Anal arasu about thalapathy vijay cameo in jawan movie with shah rukh khan | Galatta

ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் தான் ஜவான். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்க, மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்திற்கு GK.விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக நாளை  செப்டம்பர் 7ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜவான் படம் ரிலீஸாகவுள்ளது.

ஏற்கனவே வெளிவந்த ஜவான் திரைப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், படத்தில் தளபதி விஜய்யின் கேமியோ இருக்கும் என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவராத நிலையில் சர்ப்ரைஸாக தளபதி விஜயின் கேமியோ இருக்கும் என்று பேசப்படுகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரதியாக பேட்டி அளித்த ஜமான் திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் “ஜவான் திரைப்படத்தில் தளபதி விஜய் கேமியோ பண்ணி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அதைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?” என கேட்டபோது, “ஏழாம் தேதி படத்தில் தெரிந்து விடும்” என்றார். தொடர்ந்து அவரிடம், “இருக்கு இல்லை ஏதாவது சொல்லுங்கள் சார்” என கேட்டபோது, சிரித்துக் கொண்டே, “தெரியவில்லை ஏழாம் தேதி ரிலீசில் பார்த்துக் கொள்ளுங்கள்” என பதில் அளித்தார் . தொடர்ந்து பேசியவர், “இருக்கு ஆனா இல்ல அந்த மாதிரி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. ஒரு ஸ்பெஷல் மொமெண்ட் இருக்கிறது அது என்ன எது யார் என்று சொல்ல முடியாது ஆனால் நிச்சயமாக இருக்கிறது.” என பதில் அளித்து இருக்கிறார். 

ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு அவர்களின் இந்த பதிலால் தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர். இயக்குனர் அட்லி மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகர் என்பதாலும் தளபதி விஜய் அவர்களை வைத்து HAT TRICK HIT கொடுத்திருக்கிறார் என்பதாலும் கட்டாயமாக ஜவான் படத்தில் தளபதி விஜய்யின் கேமியோ இருக்கும் என ஏற்கனவே ரசிகர்கள் பெரும் ஆர்வத்தோடு இருக்கும் நிலையில், ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசுவின் இந்த பேட்டி இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குனர் அனல் அரசு அவர்களின் அந்த பிரத்தியேக பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.