அசோக் செல்வன் - சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்த புது வெப்சீரிஸ் வெப்சீரிஸ்... அதிரடியான டைட்டில் & பூஜை புகைப்படங்கள் இதோ!

அசோக் செல்வன் - சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்த புது வெப்சீரிஸ்,Ashok selvan soundarya rajinikanth gangs web series starts with pooja | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் அசோக் செல்வன் முதல் முறை சௌந்தர்யா ரஜினிகாந்த் உடன் இணையும் புதிய வெப்சீரிஸ் தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டிருக்கிறது. தனக்கென தனி பாணியில் தொடர்ந்து வித்தியாசமான கதை கலங்கல் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நிறுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் வரிசையாக சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என என ஐந்து திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த மாடர்ன் லவ் சென்னை எனும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ஆந்தாலஜி வெப் சீரிஸில் நடித்துள்ள அசோக் செல்வன் திரை பயணத்தில் தெகிடி படத்திற்கு பிறகு மற்றொரு வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் படமாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் இணைந்து நடித்த போர் தொழில் திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து இந்த 2023 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இடம் பிடித்தது.

முன்னதாக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படமாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்சமயம் அறிமுக இயக்குனர் CS.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகும் சபா நாயகன் படத்தில் அசோக் செல்வன் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக சௌந்தர்யா ரஜினிகாந்த் உடன் இணையும் அசோக் செல்வன் புதிய வெப்சைட் கதாநாயகனாக நடிக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் ஆரம்ப கட்டத்தில் கிராபிக் டிசைனராக தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றுகிறார் முதல் முறை இயக்குனராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் அனிமேஷன் படத்தை இயக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தையும் இயக்கினார்.

இதைத்தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராக தனது மே 6 என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கோவா திரைப்படத்திற்கு பிறகு அடுத்த படைப்பாக கேங்ஸ் எனும் புதிய வெப்சீரிஸை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார். நோஹா ஆபிரகாம் எழுதி இயக்கும் இந்த கேங்ஸ் வெப் சீரிஸில் அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விரைவில் இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த புதிய வெப் சீரிஸ் தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது அந்த பூஜை புகைப்படங்கள் இதோ…
 

This is going to be something really special, I can feel it. One of a kind script. Look out for #Abes! 🔥
And Looking forward working with you @soundaryaarajni Ma’am 😊 and Ofcourse @PrimeVideoIN https://t.co/TwvkGUrjr4

— Ashok Selvan (@AshokSelvan) September 6, 2023