உலகப் புகழ்மிக்க இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் ஆஸ்கார் தமிழன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இந்த ஆண்டில் (2022) வரிசையாக இயக்குனர்&நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல், சீயான் விக்ரமின் கோப்ரா, சிலம்பரசன்.TRன் வெந்து தணிந்தது காடு மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பாகம் 1 என தனது இசையால் ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.

தொடர்ந்து அடுத்த ஆண்டில் (2023) சிலம்பரசன்.TRன் பத்து தல, சிவகார்த்திகேயனின் அயலான், இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பாகம் 2, இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம், இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் மற்றும் இயக்குனர் மணிரத்னம் - உலகநாயகன் கமல்ஹாசன் இணையும் புதிய KH234 திரைப்படம் என வரிசையாக இசை விருந்து வைக்க தயாராகி வருகிறார்.

முன்னதாக இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் ஆகவும் புது அவதாரம் எடுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எழுதிய 99 சாங்ஸ் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், தற்போது இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் பிரம்மிப்பான திரைப்படமாக தயாராகி இருக்கிறது லே மஸ்க்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா உடன் இணைந்து இப்படத்தின் கதை திரைக்கதை எழுதியுள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் லே மஸ்க் திரைப்படம் ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி திரைப்படம். 36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை ரோமின் வெவ்வேறு பகுதிகளில் 13 நாட்களில் 24 கேமராக்களில் படமாக்கி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

நோரா அர்னேஸிடர் என்னும் பிரெஞ்சு நடிகை கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் கை பரனட் எனும் பிரிட்டிஷ் நடிகர் நடித்துள்ளார். ஜியான்னி ஜியாநெல்லி ஒளிப்பதிவில், லிவோ சான்ஸெச் மற்றும் ஆனந்த் கிஷோர் படத்துக்கு செய்துள்ள லே மஸ்க் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட லே மஸ்க் திரைப்படத்தை கண்டு ரசித்த அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் மெதுவாக பாராட்டியுள்ளனர். இந்நிலையில் பாபா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் பணிகளுக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவிற்கு வருகை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லே மஸ்க் திரைப்படத்தை கண்டு ரசித்துள்ளார். லே மஸ்க் திரைப்படத்தை ரஜினிகாந்த் பார்த்து ரசிக்கும் புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ…
 

Check who is watching @lemuskXperience #superstarrajinikanth pic.twitter.com/xIDKYDQipG

— A.R.Rahman (@arrahman) November 30, 2022