ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோவாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். முன்னதாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் சார்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, வசந்த் ரவி, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பேட்ட & தர்பார் வரிசையில் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான பாபா திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸாக தயாராகி வருகிறது. ரஜினிகாந்த் அவர்கள் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதிய பாபா திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பாபா திரைப்படம் கடந்த 2002ம் ஆண்டு ரிலீஸானது. இந்நிலையில் தற்போது மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புது பொலிவுடன்  ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு டிசம்பர் மாதம் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் 12ஆம் தேதி ரிலீசாக தயாராகி வருகிறது.  

படத்தொகுப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வெர்ஷனில் பாபா திரைப்படம் ரிலீஸாக உள்ளது. அதற்கென பிரத்தியேகமாக தன்னுடைய புதிய டப்பிங்கையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டப்பிங்கில் ஈடுபட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படம் இதோ…
 

#BABA counting starts...🎙️🎧#BaBaReRelease 🤘@rajinikanth #Rajini #Rajinikanth pic.twitter.com/CXSARQuDHy

— Galatta Media (@galattadotcom) November 28, 2022