கோலிவுட், பாலிவுட் & ஹாலிவுட் வரை கலக்கி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக திகழும் தனுஷ் நடிப்பில் இதுவரை இந்த ஆண்டில்(2022) வெளிவந்த மாறன், தி க்ரே மேன் (ஹாலிவுட்), திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் அடுத்ததாக முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

முன்னதாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனுடன் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுடன் வடசென்னை 2 என அடுத்தடுத்து முக்கியமான திரைப்படங்களில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். தனது முதல் திரைப்படமான டாலர் ட்ரீம்ஸ் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கமுலா தொடர்ந்து ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ், லீடர், லைஃப் இஸ் பியூட்டிஃபுல், ஃபிடா, லவ் ஸ்டோரி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க, சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று நவம்பர் 28ஆம் தேதி பூஜையோடு தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த புதிய படம் தயாராகும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெற்ற படப்பூஜையில் தனுஷ், இயக்குனர் சேகர் கமுலா தயாரிப்பாளர்கள் உட்பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அந்தப் படப் பூஜை புகைப்படங்கள் இதோ…
 

The Remarkable Moment is here for the Path Breaking Combo🌟

Superstar @dhanushkraja Director @sekharkammula TRILINGUAL FILM Launched today on a Grand Note with a pooja ceremony🪔

FILMING BEGINS SOON ❤️‍🔥#NarayanaDasNarang @AsianSuniel @puskurrammohan @SVCLLP #AmigosCreations pic.twitter.com/NfokZrA6Br

— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) November 28, 2022