விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படத்தின் வாத்தி கம்மிங் பாடல் ரிலீஸ் ஆனது முதலே பெரிய வரவேற்பை பெற்று வந்தது.வீடியோ வருவதற்கு முன்பே ஆடியோ லான்ச்சில் விஜய் ஆடிய ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.பாடல் வரிகள் இல்லாமல் மியூசிக் மட்டும் வருவதால் இந்த பாடல் இன்டர்நேஷனல் லெவல் வரை ரீச் ஆனது.

குழந்தைகள்,பெரியவர்கள் என்று பலரும் இந்த பாடலுக்கு தங்கள் வெர்ஷனை பதிவிட்டு அசத்தி வந்தனர்.மொழியை தாண்டி பல வெளிநாட்டினர்,கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி அசத்தி வந்தனர்.

தற்போது இந்த பாடலுக்கு ஐபிஎல்லில் பிரபலமான அணிகளில் ஒன்றான சன் ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்,புவனேஸ்வர் குமார் மற்றும் ரஷீத் கான் உள்ளிட்டோர் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.