உலகளவில் புகழையும் ,பெரும் ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் பிரபல ஹிந்தி நடிகை சன்னி லியோன்.இவரது வாழ்க்கை வரலாறு Web series ஆக வெளியிடப்பட்டது.இந்த தொடர் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து அசத்தி வருகிறார்.

கடந்த வருடமும் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் சன்னி லியோன் தனது புகைப்படங்கள் விடீயோக்கள் பகிர்ந்து வந்தார் சன்னி லியோன்,தமிழிலும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சன்னி லியோன்.

சன்னி லியோன் நடிப்பில் தயாராகியுள்ள முதல் தமிழ் படம் ஒ மை கோஸ்ட்.இந்த படத்தினை VAU Media Entertainment மற்றும் White Horse Studios தயாரித்துள்ளனர்.சிந்தனை செய் படத்தினை இயக்கிய யுவன் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.ஜாவித் ரியாஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா,யோகி பாபு,சதிஷ்,ரமேஷ் திலக்,பிக்பாஸ் ஜீ பி முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்