தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக ரசிகர்களை மகிழ்வித்து வந்த நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாகவும் நகைச்சுவையை மையப்படுத்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இந்த ஆண்டில்(2022) சந்தானம் நடிப்பில் வெளிவந்த குலுகுலு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படம் விரைவில் ரிலீசாக தயாராகி வருகிறது. இதனிடையே கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஸ்ரீ ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா திரைப்படத்தின் ரீமேக்காக சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம்.

இயக்குனர் மனோஜ் பிதா இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தை LABYRINTH FILMS நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற நவம்பர் 25ஆம் தேதி ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்திற்கு அஜய் படத்தொகுப்பு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்திலிருந்து ஒப்பாரி ராப் பாடல் வெளியாகியுள்ளது. அந்த பாடல் இதோ…