ஆரம்பத்தில் தனது கவர்ச்சியால் பலகோடி ரசிகர்களின் பேவரைட் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை சன்னி லியோன் தற்போது இந்திய திரை உலகில் நடிகையாக அடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.முன்னதாக தமிழில் நடிகர் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன், அடுத்ததாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் தயாராகி வரும் கொட்டேஷன் கேங் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

தொடர்ந்து வீரமாதேவி & ஷெரோ என வரிசையாக தமிழிலும் பல படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் நடிப்பில், ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட்(OMG). இயக்குனர் R.யுவன் எழுதி இயக்கியுள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா மற்றும் சதீஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

மேலும் யோகிபாபு & ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  VAU மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் வைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் ஓ மை கோஸ்ட் திரைப்படத்திற்கு தீபக்.D.மேனன் ஒளிப்பதிவில், அருள்.E.சித்தார்த் படத்தொகுப்பு செய்ய, ஜாவித் ரியாஸ் பாடல்களுக்கு இசையமைக்க, தரண் குமார் பின்னணி இசை சேர்த்துள்ளார். 

முன்னதாக ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்களின் போஸ்டர்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தர்ஷா குப்தாவின் “சௌமியா” கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் புதிய போஸ்டர் தற்போது வெளியானது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…