மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி என அனைத்து ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து தற்போது இந்திய சினிமாவின் இன்றியமையாத கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இந்த ஆண்டு(2022) வெளிவந்த ஹே சினாமிகா மற்றும் சல்யூட் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அடுத்ததாக முதல்முறை வெப் சீரிஸில் களமிறங்கிய துல்கர் சல்மான் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸில் நடித்துள்ளார். முன்னதாக பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் CHUP-REVENGE OF THE ARTIST  திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் சீதா ராமம் திரைப்படத்திலும் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். துல்கர் உடன் இணைந்து ம்ரூனல் தாகூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் சுமந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் சீதா ராமன் திரைப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் தயாரிக்க, வைஜெயந்தி மூவிஸ் வழங்குகிறது.

P.S.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் சீதா ராமம் படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சீதா ராமம் படத்தின் முதல் பாடலாக ஹே சீதா ஹே ராமா பாடல் தற்போது வெளியானது. பாடகர்கள் S.P.சரண் & சிந்தூரி பாடிய ரொமான்டிக்கான ஹே சீதா ஹே ராமா பாடல் இதோ…