படத்திற்கு படம் நல்ல கதைக்களங்களில்  நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. முன்னதாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ஹாரர் த்ரில்லர் படமான பிசாசு 2 திரைப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா நடிப்பில் மாளிகை மற்றும் கா உள்ளிட்ட திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக காத்திருக்கும் நிலையில், நடிகர் சிபி சத்யராஜ் உடன் இணைந்து வட்டம், பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கத்தில் புதிய படம் மற்றும் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து திரைப்படங்களில் ஆண்ட்ரியா தற்போது நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் R.கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்து வரும் திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், B4U AND IVY என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்கும் அனல் மேலே பனித்துளி படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி திரைப்படம் விரைவில் நேரடியாக SONYliv OTT தளத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அனல் மேலே பனித்துளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.