தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை அடுத்து இவரது டான் படம் வரும் மே 13ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படம் ரிலீஸாகவுள்ளது அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதனை அடுத்து அனுதீப் இயக்கத்தில் தயாராகும் SK 20,ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK 21 படங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

SK 21 படத்தின் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படத்தினை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.இந்த படத்தின் அறிவிப்பு முதலே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தில் ஹீரோயினாக பிரபல மலையாள நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி முதல் முறையாக ஜோடி சேர்வதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.