நாளை முதல் சனிக்கிழமை வரை வீடு தேடி தடுப்பூசி என்ற திட்டம் செயல்படுத்த இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

masuதமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 9-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், நாளை முதல் சனிக்கிழமை வரை வீடு தேடி தடுப்பூசி என்ற திட்டம் செயல்படுத்த உள்ளதாக  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து  செய்தியாளர்களை சந்திப்பில், நேற்று முன் தினம் 5000 மருத்துவ முகாம் தொடங்கி வைத்துள்ளதாகவும்,1500 வாகனங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருவதாகவும், இதன்மூலம் நேற்று வரை ஏழரை லட்சம் பேர் மழை காலங்களில் ஏற்படும் நோயினால் சிகிச்சை பெற்று பயனடைந்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் சென்னையில் வீடுகளை தேடி சென்று மழை பாதிப்புக்கான மருத்துவ திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறிய அமைச்சர், உறுப்பு தானம் யார் தருகிறார்கள் என்பதை கண்டறிய தான் ஆதார் கட்டாயம் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் தமிழகம் முழுவதும் நேற்று 50,000 இடங்களில் 8 வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல்,மாலை 7 மணி வரை நடைபெற்றது.குறிப்பாக,சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2000 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. தடுப்பூசி பொறுத்தவரை தமிழகத்தில் இதுவரை 73 % பேர் முதல் தவணையும், 35% பேர் இரண்டாம் தவணையும் செலுத்தி உள்ளதாகவும், இன்னும் 50 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிலையில்  இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அதிகரிக்கும் வகையில், நாளையில் இருந்து சனிக்கிழமை வரை வீடு தேடி கொரோனா தடுப்பூசி என்ற திட்டம் செயல்படுத்த இருப்பதாக கூறிய அமைச்சர், வரும் ஞாயிற்றுக்கிழமை 9-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.