உணவில்லாமல் இந்த உலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது.சமையல் நாம் அன்றாடம் செய்யும் மிக முக்கிய வேளைகளில் ஒன்று.ஒருவர் வாழ்வதே சாப்பிடுவதற்கு தான்,இந்த பொறப்பு தான் ருசிச்சு சாப்பிட கிடைச்சது என்று பல பொன்மொழிகள் சமையலையும்,உணவையும் பெருமைப்படுத்தும் விதமாக பல இருக்கின்றன.

உணவையும்,சமையலையும் மையப்படுத்தி பல மொழிகளில் பல முன்னணி சேனல்களில் உலகம் முழுவதும் பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தன.குறிப்பாக தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வந்த உணவு சம்மந்தமான நிகழ்ச்சிகள் பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.

விஜய் டிவியின் புதிய முயற்சியாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.பலர் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு செம என்டேர்டைன்மென்டை தருவதாகவும் ரசிகர்கள் பலர் மீம்ஸ்,வீடியோக்கள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்கள் வெளியாகி ரசிகர்ககளிடம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

சன் டிவியில் சமையலை மையப்படுத்தி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது,இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றாலும் குக் வித் கோமாளி போல பெரிய ஹிட் அடிக்கவில்லை.தற்போது சன் டிவியில் நகைச்சுவை கலந்த குக்கிங் நிகழ்ச்சி ஒன்றை தொடங்கவுள்ளனர்.இந்த நிகழ்ச்சியை குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி மற்றும் தொகுப்பாளர் நிக்கி தொகுத்து வழங்கவுள்ளனர்.இந்த நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் சன் டிவியின் பல பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்