எழுந்தால் மலை போல் எனும் வாக்கியத்திற்கு அர்த்தமாய் மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து தனது திரைப்படங்களின் இமாலய வெற்றிக்காக திட்டமிட்டு பணியாற்றிவரும் நடிகர் சிலம்பரசன்.TR அடுத்ததாக பத்து தல படத்தில் AGR எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பத்து தல திரைப்படம் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக சிலம்பரசன்.TRன் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் - சிலம்பரசன்TR வெற்றிக் கூட்டணியில் தயாராகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்தாலி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் முக்கிய நடித்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு, சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.  முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்றது. 

இந்நிலையில் வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் காலை 11:30 மணி அளவில் வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் புதிய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…