தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக முதல்முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் புதிய #AK62 படத்தில் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கும் AK62 திரைப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வேதாளம் & விவேகம் படங்களை தொடர்ந்து ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் #AK61 திரைப்படத்தில் அஜித் குமார் தற்போது நடித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் நடிகை மஞ்சுவாரியார் கதாநாயகியாக நடிக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

தொடர்ந்து தனது பைக் ரைடிங்கிலும் கவனம் செலுத்தி வரும் அஜித் குமாருடன் தற்போது நடிகை மஞ்சுவாரியரும் இணைந்து பைக் ரைடிங்கில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் இருவரும் தங்களது ஃபிட்னஸ் பயிற்சியாளர் உடனிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

Ajith sir and @ManjuWarrier4 ma'am with fitness trainer, Manjesh.

| #Ak #Ajith #AjithKumar | #Ak61 | pic.twitter.com/JNjdQZHnhx

— Ajith (@ajithFC) September 9, 2022