நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்து தற்போது கதாநாயகனாகவும் தொடர்ந்து கலக்கலான காமெடி என்டர்ட்டைனிங் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சந்தானம் கடைசியாக இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடித்த குலுகுலு திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

முன்னதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில், நகைச்சுவை ஸ்பை த்ரில்லர் படமாக சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வரிசையில் ஹீரோவாக தனது திரைப்பயணத்தில் 15-வது திரைப்படமாக சந்தானம் நடித்துள்ள திரைப்படம் கிக். பிரபல கன்னட இயக்குனர் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் சந்தானம் உடன் இணைந்து தன்யா போப் கதாநாயகியாக நடித்துள்ள கிக் படத்தில் ராகினி திரிவேதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிப்பில், சுதாகர்.S.ராஜ் ஒளிப்பதிவில், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்துள்ள கிக் திரைப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். கிக் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

தற்போது கிக் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சந்தானம், கிக் படத்தின் ஆடியோ பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயக்குனர் பிரசாந்த் ராஜ் மற்றும் இசையமைப்பாளர் அர்ஜுன் ஜனயா இருவரையும் ஸ்டூடியோவில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் கிக் திரைப்படத்தின் இறுதிகட்ட ஆடியோ பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
 

#Santhanam has visited Fortune Studios to listen the final legs of the Audio work of #KICK 💥 More updates 🔜@iamsanthanam @iamprashantraj @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic @iamnaveenraaj #FortuneFilms #ProductionNo10 @johnsoncinepro pic.twitter.com/pQwILh1U6p

— Fortune films (@Fortune_films) September 9, 2022