தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருப்பவர் தியா மேனன்.சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார் தியா.தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சன் மியூசிக்கின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக வளர்ந்தார்.

சன் மியூசிக் மட்டுமின்றி சன் டிவியிலும் பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார் தியா மேனன்.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது குறிப்பிடத்தக்கது.பல விருது விழாக்கள் மற்றும் இசை வெளியிட்டு விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார் தியா.

2016-ல் கிரிக்கெட் வீரர் கார்த்திக் சுப்ரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தியா.2018-ல் விஜய் நடித்த சர்கார் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார்.இதன்பிறகு டிவியில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டடார் தியா மேனன்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

இவர் கர்பமாக இருக்கும் நற்செய்தியை சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.தற்போது இவரது கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்