தமிழ் சினிமா ரசிகர்களிடம் தனது வித்தியாசமான கதைத்தேர்வின் மூலம் நல்ல நடிகராக உருவெடுத்துள்ளவர் அதர்வா.இவர் நடித்த குருதி ஆட்டம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.இதனை தொடர்ந்து சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஒத்தைக்கு ஒத்த,நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்கள் அடுத்து ரிலீஸாகவுள்ளன.8 தோட்டாக்கள் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார்.ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் டி.முருகானந்தம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.ராதிகா,ராதாரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.

பலமுறை தள்ளிப்போன இந்த படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் சிலவற்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சிகளை கீழே உள்ள லிங்கில் காணலாம்