"மொத்த ஆக்ஷனும் டிசைன் பண்ணது நெல்சன் சார் தான்"- சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படம் குறித்து மனம் திறந்த ஸ்டன் சிவா! வீடியோ உள்ளே

ஜெயிலர் படத்தில் நெல்சனின் எழுத்து பற்றி பேசிய ஸ்டன் சிவா,stun siva about nelson action scenes writing in rajinikanth in jailer | Galatta

உலகளவில் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாகவும் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்தடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப்பெரிய எதிர்பாரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில், இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இமயமலை புறப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் லால் சலாம் படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. 

அடுத்ததாக லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் தலைவர் 170 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை நாயகனாக நடிக்கிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதனிடையே முதல்முறையாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நேற்று ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம்  ரிலீஸாகி பக்கா ஆக்ஷன் என்டர்டெய்னராக ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த ஜெயிலர் திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சிவா அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில்,  ஜெயிலர் திரைப்படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகள் குறித்தும் அதில் இயக்குனர் நெல்சன் அவர்களின் முக்கிய பங்கு குறித்தும் ஸ்டண் சிவா அவர்கள் பேசினார். அப்படி பேசுவையில், “ஸ்கிரிப்டில் மிகச் சரியாக என்ன தேவையோ அதில் தெளிவாக இருப்பார் மொத்த திரைப்படத்திற்கும் ஆக்ஷனை டிசைன் செய்தது அவர்தான் நாம் எடுத்தோம் கோரியோகிராப் செய்தோம் ஸ்பாட்டில் சில விஷயங்கள் என எல்லாவற்றையும் ஸ்கிரிப்டில் எழுதி இருப்பார். அதனால் எடுப்பது எங்களுக்கு கொஞ்சம் ஈசியாக இருந்தது லொகேஷன் மற்றும் இதர விஷயங்களில் நிறைய செய்தோம் நிறைய கலந்துரையாடினோம் நிறைய ஷாட்டுகள் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்தோம் எல்லாமே மிகவும் எக்ஸ்பென்சிவான ஆக்சன் பிளாக்குகள் அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் நன்றாக இருந்தது.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஸ்டன் சிவா அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.