ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட முதல் பாடல்... கங்கனா ரணாவத்தின் அசத்தல் நடனத்தில் "ஸ்வாகத்தாஞ்லி" லிரிக் வீடியோ இதோ!

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட ஸ்வாகத்தாஞ்லி பாடல் வெளியீடு,raghava lawrence in chandramukhi 2 movie swagathaanjali song out now | Galatta

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக ஸ்வாகத்தாஞ்லி பாடல் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்களில் முக்கிய படமாக பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி. முன்னதாக மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து 2005ல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும், சந்திரமுகி 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.

முன்னதாக சந்திரமுகி 2 படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். கதையின் நாயகன் நாயகியாக ராகவா லாரன்ஸ் மற்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்து நடித்துள்ளனர். வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைத்துள்ளாஏர்.  

விறுவிறுப்பாக நடைபெற்ற சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு முற்றிலுமாக நிறைவடைந்தது. இருப்பினும் கடைசியாக ஒரு பாடலின் படப்பிடிப்பு மீதம் இருப்பதால் இதற்காக சந்திரமுகி 2 படக்குழுவினர் தற்போது ஜார்ஜியா நாட்டிற்கு சமீபத்தில் சென்றுள்ளனர். அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான பக்கா ஹாரர் காமெடி ஃபேமிலி என்டர்டெயன்ராக ட்ரீட்டாக வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. எனவே அதற்காக சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளிவந்தது. இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையில் சந்தரமுகியின் “ரா ரா” பாணியில் தெலுங்கில் உருவாகி இருக்கும் இந்த ஸ்வாகத்தாஞ்லி பாடலை ஸ்ரீநிதி திருமலா பாடி இருக்கிறார். சைதன்யா பிரசாத் அவர்கள் எழுதியிருக்கும் இந்த ஸ்வாகதாஞ்சலி பாடலுக்கு “ரா ரா” பாடலுக்கு நடன இயக்கம் செய்த கலா மாஸ்டர் அவர்களே நடன இயக்கம் செய்திருக்கிறார். ஒருபுறம் கங்கனா ரனாவத்தின் அசத்தலான நடனமும் மறுபுறம் வேட்டைய ராஜாவாக ராகவா லாரன்ஸின் அதிரடியும் என வெளிவந்திருக்கும் அட்டகாசமான இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.