புதிய சீசனுடன் தொடங்குகிறது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி !
By Aravind Selvam | Galatta | October 06, 2021 11:24 AM IST
விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.
சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.
அப்படி விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி அனைவரையும் கவர்ந்த சூப்பர்ஹிட் நிகழ்ச்சி ஸ்டார்ட் மியூசிக்.பிரியங்கா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்திருந்தது.
தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா பிக்பாஸ் சென்றுவிட்டதால் இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கவுள்ளார்.அக்டோபர் 10ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்