இந்திய சினிமாவின் மிக முக்கிய கமர்சியல் இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் S.S.ராஜமௌலி தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார். பாகுபலி 1&2 திரைப்படங்களின் இமாலய வெற்றியை தொடர்ந்து S.S.ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் RRR.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசாக இருக்கும் RRR படத்தில் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிதுதுள்ளார் மேலும் அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரிக்கும் RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. RRR படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் KK.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் M.M.கீரவாணி இசையமைத்துள்ளார்.

இதுவரை வெளிவந்த RRR திரைப்படத்தின் RRR-GLIMPSE வீடியோ,ட்ரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் வருகிற மார்ச் 18 ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28 ஆம் தேதி திரைப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .