தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவரது இயக்கத்தில் வெளியான கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் வெப்சீரிஸை தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வருடம் விஷாகனை திருமணம் செய்தார். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த அழகான தம்பதியை பல திரைப்பிரபலங்கள் வாழ்த்தினர். 

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விஷாகனின் பிறந்தநாளை எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் போட்டோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அருகில் மகன் வேத் உள்ளார். அவரது பதிவில், நன்றி நீங்கள் நீங்களாக இருப்பதற்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் என்று பதிவு செய்துள்ளார். சௌந்தர்யாவின் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர். இதே லாக்டவுனில் தான் தன் மகன் வேத்தின் 5-வது பிறந்தநாளை கொண்டாடினார் சௌந்தர்யா. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பாகவும் விஷாகனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

2018-ம் ஆண்டு குரு சோமசுந்தரம் நடித்து வெளியான வஞ்சகர் உலகம் படத்தில் நடித்திருந்தார் விஷாகன். மனோஜ் பீதா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஷாகனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதன் பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர். பிறந்தநாள், திருமணங்கள், வீட்டு விசேஷங்கள் என பல சுப நிகழ்ச்சிகள் எளிமையாகவே கொண்டாடப்படுகிறது.