தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் வலம் வரும் SJ.சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் ராம்சரண் நடிப்பில் தயாராகும் RC15 திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக SJ.சூர்யா நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து மார்க் ஆண்டனி படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் SJ.சூர்யா தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் SJ.சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இதனிடையே முதல் முறையாக வெப்சீரிஸில் களமிறங்கியிருக்கும் SJ.சூர்யா, விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் இணைந்து தயாரிக்கும் வதந்தி - The Fable of velonie எனும் வெப் சீரிஸில் கதாநாயகனாக நடித்துள்ளார். முன்னதாக புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த சுழல் வெப்சீரிஸ் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இவர்களது தயாரிப்பில் அடுத்து வெளிவரும் வதந்தி வெப் சீரிஸும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொலைகாரன் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் SJ.சூர்யாவுடன் இணைந்து லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் இணைந்து நடித்துள்ள வதந்தி வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் வருகிற டிசம்பர் 2-ம் தேதி முதல் வதந்தி வெப்சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் இதோ…
 

It’s not a rumour about me…it’s my first web series in ⁦@PrimeVideo⁩ Vadhandhi. Very happy to share the first look 🥰🥰🥰👍👍👍💐💐💐Catch our new thriller #VadhandhiOnPrime on 2nd December directed by ⁦@andrewxvasanth⁩ and produced by ⁦@PushkarGayatripic.twitter.com/0JOf5Z7Uz3

— S J Suryah (@iam_SJSuryah) November 17, 2022