தமிழ்த் திரையுலகின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து விதவிதமான கதாபாத்திரங்களில் தேர்ந்த நடிகராக சிறப்பாக நடித்து ரசிகர்களை கவரும் நடிகர் SJ.சூர்யா, முன்னதாக இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடித்துள்ள பொம்மை திரைப்படம் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது. தொடர்ந்து நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் படத்தில் நடித்து வருகிறார் SJ.சூர்யா.

அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முன்னணி தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் RC15 திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் SJ.சூர்யா, அடுத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN இந்தியா திரைப்படமாக மினி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். G.V.பிரகாஷ் குமார் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். 

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் SJ.சூர்யாவின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய கேரக்டர் போஸ்டர் தற்போது வெளியானது. மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஜாக்கி பாண்டியன் எனும் அசத்தலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் SJ.சூர்யாவின் கேரக்டர் போஸ்டர் இதோ…
 

Presenting you the first look of @iam_SJSuryah sir in #MarkAntony 💣💥🔥 JACKIE PANIDAN 🔥 Whata an experience each day on sets with u sir complete Madness & Craziness💯 @VishalKOfficial @vinod_offl @riturv @gvprakash @AbinandhanR @editorvijay @RVijaimurugan @dhilipaction @NjSatz pic.twitter.com/x5dPKvHPtq

— Adhik Ravichandran (@Adhikravi) October 5, 2022