மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் நிவின் பாலி பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தார். கடைசியாக இந்த ஆண்டில் (2022) நிவின்பாலி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மகாவீரயர் படம் ஃபேண்டசி காமெடி படமாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

தமிழில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மலையாளத்தில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின்பாலி நடித்திருக்கும் சாட்டர்டே நைட் திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக நிவின்பாலியின் துறைமுகம் திரைப்படம் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக காத்திருக்கிறது.

இதனிடையே இயக்குனர் லிஜு கிருஷ்ணா இயக்கத்தில் நிவின்பாலி நடித்திருக்கும் திரைப்படம் படவெட்டு. YOODLE FILMS மற்றும் சன்னி வெய்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படவெடு படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து அதிதி பாலன், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தீபக்.D.மேனன் ஒளிப்பதிவில், ஷஃபீக் முஹம்மது அலி படத்தொகுப்பு செய்துள்ள, படவெட்டு படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் 21ஆம் தேதி படவெட்டு படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படவெட்டு திரைப்படத்தில் இருந்து மழ பட்டு எனும் பாடல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த பாடல் வீடியோ இதோ…