இன்றைக்கு ட்ரெண்டில் குறிப்பாக OTT தளங்களின் வருகைக்கு பின்பு உலக அளவில் பல மொழிகளில் த்ரில்லர் சீரியல்களை, சீரிஸ்களை ரசிகர்கள் தேடித்தேடி பார்த்து ரசிக்கின்றனர். ஆனால் 1990களின் காலகட்டத்தில் இருந்து இன்று வரை 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட்டானா தொடர்களில் ஒன்றாக திகழும் மர்ம தேசம் - விடாது கருப்பு தொடரின் மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு.

சன் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த மர்ம தேசம் தொடர்ந்து ராஜ் டிவியில் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒளிபரப்பானது. இதனையடுத்து கடந்த கொரோனா லாக்டவுன் சமயத்தில் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பின்னும் டிஆர்பியில் மாஸ் காட்டியது.

இந்த மர்ம தேசம் தொடரில் குழந்தை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் லோகேஷ் ராஜேந்திரன். மர்மதேசம் தொடரை தொடர்ந்து ஃபேண்டஸி தொடராக லோகேஷ் ராஜேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ஜீபூம்பா தொடரும் குழந்தைகளின் மோஸ்ட் ஃபேவரட் தொடராக கொண்டாடப்பட்டது.

ஜீபூம்பா தொடருக்குப் பிறகு ரசிகர்களிடையே மிகப் பிரபலமடைந்த நடிகர் லோகேஷ் ராஜேந்திரன் தமிழ் திரையுலகில் நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இயக்குனர் நாகாவின் அறிவுரையின்படி இயக்குனராகும் முனைப்போடு சினிமா தொழில் நுட்பங்கள் அனைத்தையும் பயின்றார் லோகேஷ் ராஜேந்திரன்.

இதனிடையே லோகேஷ் ராஜேந்திரன் திடீரென நேற்று (செப்டம்பர் அக்டோபர் 4ஆம் தேதி) தற்கொலை செய்துகொண்டார். நடிகர் லோகேஷ் ராஜேந்திரனின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் லோகேஷ் ராஜேந்திரனின் இந்த தற்கொலை முடிவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகர் லோகேஷ் ராஜேந்திரனுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.