‘குழப்பம் வந்தால் சிரிப்பு எப்படி வரும்!’- மார்க் ஆண்டனி படத்தை மாநாடு படத்துடன் ஒப்பிட்டு SJசூர்யா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்! வீடியோ இதோ

Sj suryah about maanaadu and mark antony concepts vishal | Galatta

தமிழ் சினிமாவில் தனி சிறப்பு மிக்க நடிகராக திகழ்வர் SJ.சூர்யா. தனது திரை பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் இயக்குனராக அஜித்குமார் மற்றும் தளபதி விஜய் ஆகியோரை வைத்து வாலி & குஷி என பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் SJ.சூர்யா பின்னர் தனது நியூ திரைப்படத்திலிருந்து நடிகராக அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து நடிகராக பல்வேறு விதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் SJ.சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பொம்மை. முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து SJ.சூர்யா நடித்திருக்கும் ஜிகர்தண்டா திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இயக்குனர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்த தயாராகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அடுத்து நடிகர் தனுஷ் தனது 50வது படமாக இயக்கி நடிக்கும் D50 படத்திலும் சூர்யா நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதனிடையே நடிகர் விஷாலுடன் இணைந்து சூரிய முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக மார்க் ஆண்டனி படம் 2023ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெளியீடாக  வரும் செப்டம்பர் 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இது டைம் ட்ராவல் கொண்ட படம் என்பதால் மாநாடு படத்தோடு ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பற்றி எங்கள் பேட்டி அளித்த சூர்யா அவர்கள் அப்படி பேசும் போது, “இது ரொம்பவும் FREAKYயான படம் ஒரு மாதிரி புது genre அப்படி ஒன்றை உருவாக்கி விட்டார் இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரன். மாநாடு 2 என சொல்லலாம்.” என்றார்.

தொடர்ந்து, “மாநாடு படம் பார்க்கும்போது அது மிகவும் காம்ப்ளக்ஸான ஒரு வடிவத்தில் இருக்கும் மார்க் ஆண்டனி படத்தில் அது மாதிரியாக சில விஷயங்கள் இருப்பதாக சொல்கிறார்கள் 1970 களிலும் 1990 களிலும் ஒரே சமயத்தில் கதை நகர்வது போல் இருப்பதாக சொல்கிறார்கள்” எனக் கேட்டபோது, “இதுவும் அப்படித்தான் இருக்கும் ஆனால் கொஞ்சமும் குழப்பாமல் எடுத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன் சார். குழம்புகிறார்கள் குழம்பவில்லை என்பதெல்லாம் இரண்டாவது பிரச்சனை. சிரித்து சந்தோஷமாக பார்ப்பார்கள் குழப்பம் வந்தால் சிரிப்பு எப்படி வரும் சந்தோஷமாக பார்ப்பார்கள்” என்றார். மேலும் மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட SJ.சூர்யா அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…