“அதிரனும் டா..” ஜிவி பிரகாஷ் இசையில் அதிரடியான பாடலை பாடிய டி ராஜேந்தர்.. - ‘மார்க் ஆண்டனி’ படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்..

விஷாலின் மார்க் ஆண்டனியில் பாடும் டி ராஜேந்தர் வைரல் வீடியோ உள்ளே -  Vishal SJ suryah Mark antony movie first single update | Galatta

தனித்துவமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் ஹிட் திரைப்பட நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷால். தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பை பெரும் திரைப்படங்களில் விஷால் நடித்து கவனம் பெற்று வருகிறார். அதன்படி கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘லத்தி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து விஷால் இயக்குனராக அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதை தொடர்ந்து விஷாலின் 34 வது திரைப்படத்தை இயக்குனர் விஷால் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழ் திரையுலகில் அடுத்த அட்டகாசமான திரைப்படமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வித்யாமான Sci Fi திரைப்படமாக உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார் மேலும் படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

மாறுபட்ட கதைகளத்தில் டைம் டிராவல் கான்செப்ட்டை மையமாக கொண்டு வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக உருவான இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் – எஸ் ஜே சூர்யா மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து முன்னதாக வெளியான டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படத்தின் மீது உருவாக்கியுள்ளது.

மார்க் ஆண்டனி படத்தின் இறுதி கட்ட பணிகள் மற்றும் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மார்க் ஆண்டனி படத்தின் டைட்டில் பாடலை பிரபல நடிகரும் இயக்குனரும் மற்றும் பன்முக திறமையாளருமான டி ராஜேந்தர் அவர்கள் பாடியுள்ளார். இது தொடர்பாக படக்குழு அட்டகாசமான வீடியோவை வெளியிட்டுள்ளது. ‘அதிருதா’ என்ற இப்படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை மாதம் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. டி ராஜேந்தரின் கம்பீரமாக குரலில் மாஸாக உருவாகி உள்ள இப்பாடலின் புரோமோ தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வைரலாகி வருகிறது.

உள்ள அதிரனும் டா …. Super happy to collaborate with the legendary #TRajendar sir for the first single #markantony#adhirudha soon … @VishalKOfficial @Adhikravi @vinod_offl @iam_SJSuryah @thinkmusicindia pic.twitter.com/RsqSl7YXhV

— G.V.Prakash Kumar (@gvprakash) July 12, 2023

 

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50 படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்.. - அட்டகாசமான அப்டேட்டுகளுடன் வெளியான வீடியோ வைரல்..
சினிமா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50 படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்.. - அட்டகாசமான அப்டேட்டுகளுடன் வெளியான வீடியோ வைரல்..

“எனக்கு நினைவு அஞ்சலி போஸ்டர் ஒட்டிருப்பாங்க..” அநீதி திரைப்பட மேடையில் உடைந்து பேசிய இயக்குனர் வசந்த பாலன் – முழு வீடியோ உள்ளே..
சினிமா

“எனக்கு நினைவு அஞ்சலி போஸ்டர் ஒட்டிருப்பாங்க..” அநீதி திரைப்பட மேடையில் உடைந்து பேசிய இயக்குனர் வசந்த பாலன் – முழு வீடியோ உள்ளே..

சியான் விக்ரமின் ஸ்டைலிஷ் ஆக்ஷன் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.. – ரிலீஸ், பாடல் குறித்த அப்டேட்டை பகிர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
சினிமா

சியான் விக்ரமின் ஸ்டைலிஷ் ஆக்ஷன் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.. – ரிலீஸ், பாடல் குறித்த அப்டேட்டை பகிர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..