பக்கா ஆக்சன் ட்ரீட் கிச்சா46...  வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு - கிச்சா சுதீப்பின் அதிரடி பட மிரட்டலான முதல் GLIMPSE இதோ!

வாடிவாசல் தயாரிப்பாளர் தாணு கிச்சா 46 பட டீசர் ரிலீஸ் வெளியீடு,Kiccha sudeep kalaippuli s thanu kiccha46 teaser out now | Galatta

முதல்முறையாக கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப் உடன் கைகோர்த்திருக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்கள் தயாரிக்கும் கிச்சா 46 திரைப்படத்தின் டீசர் வெளியானது. தமிழ் சினிமாவின் நட்சத்திர தயாரிப்பாளராக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அடுத்ததாக ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல் முறையாக சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் வாடிவாசல் திரைப்படத்தை தயாரிக்கிறார். வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக நுணுக்கமான பிரம்மிக்க வைக்கும் VFX காட்சிகள் வாடிவாசல் திரைப்படத்திற்கு தேவைப்படுவதால் அதற்காக ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய முன்னணி நிறுவனத்தோடு இணைந்து லண்டனில் தங்கி இருந்து அந்த CG பணிகளை இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் கண்காணித்து வந்தார். மேலும் வாடிவாசல் திரைப்படத்திற்காக பிரத்யேகமாக அனிமேட்ரானிக்ஸ் முறையில் காளை ரோபோவாக உருவாக்கி வருகின்றனர். இது வாடிவாசல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது.

இதனிடையே தனது தயாரிப்பில் அடுத்த முக்கிய திரைப்படமாக கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிலான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த கிச்சா சுதீப் தொடர்ந்து பாகுபலி, தபாங் 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு கிச்சா சுதீப் நடிப்பில் வெளிவந்த விக்ராந்த் ரோனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த வரிசையில் தனது திரைப் பயணத்தில் 46வது திரைப்படமாக உருவாகும் புதிய #கிச்சா46 திரைப்படத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களுடன் கிச்சா சுதீப் கைகோர்த்துள்ளார்.  

கலைப்புலி எஸ் தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் மற்றும் கிச்சா சுதீப் அவர்களின் கிச்சா கிரியேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் கிச்சன் 46 திரைப்படத்தை இயக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்குகிறார். சேகர் சந்திரா ஒளிப்பதிவில் கணேஷ் பாபு படத்தொகுப்பு செய்யும் கிச்சா 46 திரைப்படத்திற்கு அஜனீஸ் லோக்நாத் இசையமைக்கிறார். முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த கிச்சன் 46 திரைப்படம் பக்கா அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த கிச்சா 46 திரைப்படத்தின் முதல் ப்ரோமோ தற்போது வெளியானது. மிரட்டலான லுக்கில் கிச்சா சுதீப் தன் உடலில் துளைத்திருக்கும் தோட்டாக்களை எடுத்து கோப்பையில் இருக்கும் பீரில் போடுவது போன்ற காட்சியோடு தொடங்கும் இந்த புரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது. பேன் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவர இருக்கும் கிச்சா 46 படத்தின் அந்த புரோமோ வீடியோ இதோ… 
 

மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - வைகைப்புயல் வடிவேலுவின் PHOTO SHOOT மேக்கிங் வீடியோ!
சினிமா

மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - வைகைப்புயல் வடிவேலுவின் PHOTO SHOOT மேக்கிங் வீடியோ!

'அந்த ஒரு புள்ளியில் தான் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டது!'- மாரி செல்வராஜிடம் பிடித்த அரசியல்... உதயநிதி ஸ்டாலினின் சிறப்பு பேட்டி உள்ளே!
சினிமா

'அந்த ஒரு புள்ளியில் தான் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டது!'- மாரி செல்வராஜிடம் பிடித்த அரசியல்... உதயநிதி ஸ்டாலினின் சிறப்பு பேட்டி உள்ளே!

சினிமா

"SK ரசிகர்களே ரெடியா?"- சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… கவனத்தை ஈர்க்கும் புது GLIMPSE இதோ!