ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய வேட்டையாடு விளையாடு... சிறந்த FANBOY இயக்குனர் யார்?- கௌதம் மேனன் & லோகேஷ் கனகராஜ் பதில்கள் இதோ!

வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் பற்றி கௌதம் மேனன் லோகேஷ் கனகராஜ்,Lokesh kanagaraj and gautham menon about on vettaiyaadu vilaiyaadu rerelease | Galatta

உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்களான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் சிறந்த FANBOY இயக்குனர் யார் என்பது குறித்து ட்விட்டரில் பேசிய உரையாடல்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற கலைஞானியாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது FANBOY சம்பவமாக உருவாக்கிய விக்ரம் திரைப்படம் கடந்த ஆண்டின்(2022) மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கிய வருகிறார். இந்த லியோ திரைப்படத்தில் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகரான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசனின் திரை பயணத்தில் மிக முக்கிய படமாக வெளிவந்து மெகா ஹிட்டான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் திரை பயணத்திலும் மிக முக்கிய படமாக அமைந்த இந்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக நட்சத்திர நாயகர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரீ ரிலீஸாகி ஒரு வாரம் கடந்தும் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ரசிகர்கள் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் மீது அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அதிகப்படியான டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இந்த நிலையில் இந்த செய்தியை குறிப்பிட்ட ரசிகர் ஒருவர், “எனக்கென்னமோ யார் ஆண்டவரின் சிறந்த FANBOY இயக்குனர் என்ற சண்டையில் முதலிடத்தை பிடித்தது கௌதம் வாசுதேவ் மேனன் சார் தான் என்று தோன்றுகிறது. மன்னிக்க வேண்டும் லோகேஷ் கனகராஜ் ப்ரோ” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு பதில் அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள், “சந்தேகமே வேண்டாம் ப்ரோ.. GVM சார் தான்” என பதில் அளித்தார். லோகேஷ் கனகராஜ் அவர்களின் இந்த பதிலை குறிப்பிட்டு பதில் அளித்த கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள், “நாயகன் மீண்டும் வரான் என விக்ரம் படம் வரும் வரையில் அப்படித் தான் இருந்தது. நான் இன்னும் முயற்சி செய்து இதைவிட பெரிதாக செய்ய வேண்டும். இது ஒரு நல்ல சவாலாக இருக்கும் லோகேஷ் கனகராஜ். ஆனால் இந்த சண்டையில் சட்டைக் கிழியாது. அன்பு மட்டும்தான்” என குறிப்பிட்டு இருக்கிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களின் இந்த பதிலுக்கு பதில் கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவர்கள், “எக்கச்சக்கமான அன்பும் மரியாதையும் உங்களுக்கு சார்... வேட்டையாடு விளையாடு படத்தின் ரீ ரிலீஸ் கிடைத்திருக்கும் இந்த மிகப்பெரிய வரவேற்பை பார்க்கும்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இன்னும் அதிகமான அன்பும் சக்தியும் நம் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு.. அன்பே சிவம்” என பதிவிட்டு இருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கௌதம் வாசுதேவன் அவர்களின் இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன. அந்தப் பதிவுகள் இதோ…
 

எனக்கென்னமோ யார் ஆண்டவரின் Best Fan Boy Director என்ற சண்டையில் முதலிடத்தை பிடித்தது GVM @menongautham சார்தான் என்று தோன்றுகிறது. Sorry to say this லோகி @Dir_Lokesh ப்ரோ....#VettaiyaaduVilaiyaadu #KamalHaasan𓃵 pic.twitter.com/xtjWMvpUdg

— APPU (@gopi_twitz) July 1, 2023

‘Was’
Until you and ‘Nayagan meendum varaan’ came. #Vikram
I have to try and rise above that.
Will be a good challenge @Dir_lokesh
Aana Intha sandaiyila satta kizhiyaadhu…
Only Love https://t.co/sVBB3IPQpI

— Gauthamvasudevmenon (@menongautham) July 2, 2023

Loads of love and respect to you sir! ❤️

Thrilled and exhilarated to see the response for the re-release of #VettaiyaaduVilaiyaadu film now, more love and power to our #Ulaganayagan @ikamalhaasan sir 🔥 #AnbeSivam https://t.co/rS37wrbCCF

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 2, 2023

உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட வெற்றிக்கு மாரி செல்வராஜுக்கு ஸ்பெஷல் பரிசு... என்ன தெரியுமா?- ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ
சினிமா

உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட வெற்றிக்கு மாரி செல்வராஜுக்கு ஸ்பெஷல் பரிசு... என்ன தெரியுமா?- ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ

இறுதிக்கட்டத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் - அருண் விஜயின் அதிரடி ஆக்ஷன் படம்.. செம்ம அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

இறுதிக்கட்டத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் - அருண் விஜயின் அதிரடி ஆக்ஷன் படம்.. செம்ம அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - வைகைப்புயல் வடிவேலுவின் PHOTO SHOOT மேக்கிங் வீடியோ!
சினிமா

மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - வைகைப்புயல் வடிவேலுவின் PHOTO SHOOT மேக்கிங் வீடியோ!