'நெல்சனை கலாய்க்கும் அனிருத்!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் பாடல் அறிவிப்பு ப்ரோமாவுக்கு ப்ரோமோ! கலக்கல் வீடியோ இதோ

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் பாடல் அறிவிப்பு ப்ரோமாவுக்கு ப்ரோமோ,rajinikanth in jailer movie first single announcement special promo | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த ட்ரீட்டாக வெளிவர இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல் அறிவிப்பு ப்ரோமோவுக்கு ப்ரோமோ விட்டு படக்குழு கலகலப்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோவாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்சமயம் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதனைத் தொடர்ந்து லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை நாயகனாக நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் இயக்க இருக்கிறார். இது குறித்த இதர அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அடுத்ததாக தலைவர் 171 படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைய இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே முதல்முறையாக கோலமாவு கோகிலா டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பு செய்யும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலுக்கான அறிவிப்பு தற்போது வெளிவந்தது. அதாவது முதல் பாடலுக்கான அறிவிப்பு வீடியோ நாளை மாலை 6:00 மணி அளவில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பாடலுக்கான அறிவிப்பை ரசிகர்கள் விரும்பும் வகையில் ப்ரோமோ வீடியோவாக கொடுப்பதை இயக்குனர் நெல்சன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் பாடல் அறிவிப்புக்காக வந்த வீடியோக்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அப்படி ஒரு வீடியோ ஜெயிலர் திரைப்படத்திற்காகவும் தயார் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்த ப்ரோமோ வீடியோவை அறிவிப்பதற்கு, “முதல் பாடல் ரெடி… அறிவிப்பு ப்ரோமோ ரெடி… ப்ரோமோவுக்கு ப்ரோமோவும் ரெடி” என குறிப்பிட்டு அந்த ப்ரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். இயக்குனர் நெல்சனை இசையமைப்பாளர் அனிருத் கலாய்க்கும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

First Single ready. Announcement Promo Ready. Promo ku Promo-um ready 😉
#JailerFirstSingle Update Tomorrow at 6pm.⁰@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabupic.twitter.com/EVaLlrp4XK

— Sun Pictures (@sunpictures) July 2, 2023

இறுதிக்கட்டத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் - அருண் விஜயின் அதிரடி ஆக்ஷன் படம்.. செம்ம அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

இறுதிக்கட்டத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் - அருண் விஜயின் அதிரடி ஆக்ஷன் படம்.. செம்ம அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - வைகைப்புயல் வடிவேலுவின் PHOTO SHOOT மேக்கிங் வீடியோ!
சினிமா

மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - வைகைப்புயல் வடிவேலுவின் PHOTO SHOOT மேக்கிங் வீடியோ!

'அந்த ஒரு புள்ளியில் தான் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டது!'- மாரி செல்வராஜிடம் பிடித்த அரசியல்... உதயநிதி ஸ்டாலினின் சிறப்பு பேட்டி உள்ளே!
சினிமா

'அந்த ஒரு புள்ளியில் தான் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டது!'- மாரி செல்வராஜிடம் பிடித்த அரசியல்... உதயநிதி ஸ்டாலினின் சிறப்பு பேட்டி உள்ளே!