எமோஷனலான டான் படத்தின் வெளியிடப்படாத முதல் நாயகன் பாடல் வீடியோ !
By Aravind Selvam | Galatta | July 22, 2022 20:03 PM IST
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் ஹீரோவாக நடித்து கடந்த மே 13ஆம் தேதி வெளியாகி திரையரங்குங்களில் வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் டான்.கல்லூரி மாணவன் தன் கனவை நோக்கி எடுத்து வைக்கும் படிகள் குறித்து ஜாலியாகவும் எமோஷனல் ஆகவும் தெரிவித்துள்ளது இந்த படம்.
ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுகளை அள்ளி வருகிறது இந்த படம்.லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.
அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பல இடங்களில் இந்த படம் வசூல் சாதனை படைத்துள்ளது.
பலரது பாராட்டுகளை அள்ளிய இந்த படம் உலகம் முழுவதும் வசூலில் 100 கோடிகளை கடந்து பெரிய சாதனை படைத்துள்ளது.இந்த படத்தில் இடம்பெற்று ஆல்பத்தில் இடம்பெறாத எமோஷனல் அப்பா பாடலான முதல் நாயகன் பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்