இந்தியாவின் பெருமைமிக்க உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது தேசிய திரைப்பட விருதுகள்.வருடா வருடம் வெளியாகும் படங்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து அதற்கான அங்கீகாரத்தை இந்திய அரசு வழங்கி வருகிறது.2020ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது.

68ஆவது தேசிய திரைப்பட விருதுகளை ஜூரி இன்று அறிவித்தனர்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் அசத்திய 300க்கும் மேற்பட்ட படங்கள் இந்த விருதுகளில் போட்டியிட்டன.அதில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து இந்த விருதுகளை தற்போது அறிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா சார்பில் சூரரைப் போற்று.மண்டேலா,சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படங்கள் 10 விருதுகளை அள்ளியுள்ளன.இதேபோல மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஐயப்பனும் கோஷியும்,Alavaikunthapuramuloo,கலர் போட்டோ,ஹிந்தியில் தன்ஹாஜி உள்ளிட்ட பல படங்கள் விருதுகளை அள்ளியுள்ளன.

68ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் வெற்றிபெற்றபடங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்ற முழு விவரத்தை கீழே காணலாம்

தமிழ்

சிறந்த படம் - சூரரைப்போற்று
சிறந்த நடிகர் - சூர்யா (சூரரைப் போற்று )
சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று )
சிறந்த பின்னணி இசை- ஜீ.வி.பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று )
சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா, ஷாலினி உஷா நாயர் (சூரரைப் போற்று )
சிறந்த தமிழ் படம் - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிறந்த படத்தொகுப்பு - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிறந்த வசனம் - மடோன் அஷ்வின் ( மண்டேலா)
சிறந்த அறிமுக இயக்குனர் - மடோன் அஷ்வின் ( மண்டேலா)

மலையாளம்
சிறந்த மலையாள படம் - திங்கலஞ்ச நிச்சயம்
சிறந்த இயக்குநர் - சச்சிதானந்தன் (அய்யப்பனும் கோஷியும்)
சிறந்த சண்டைக்காட்சி வடிவமைப்பு -  அய்யப்பனும் கோஷியும்
சிறந்த ப்ரொடக்சன் டிசைன் - கப்பேலா
சிறந்த பின்னணி பாடகி - நஞ்சம்மா ( அய்யப்பனும் கோஷியும் )

தெலுங்கு
சிறந்த தெலுங்கு படம் - கலர் போட்டோ
சிறந்த நடனம் - சந்தியா ராஜூ 
சிறந்த இசை - தமன் 
சிறந்த ஒப்பனை - டிவி ராம்பாபு

ஹிந்தி
சிறந்த நடிகர் - அஜய் தேவ்கன் 
சிறந்த பொழுதுபோக்கு படம் - தன்ஹாஜி unsung warrior
சிறந்த ஆடை வடிவமைப்பு - நச்சிகேத் பார்வே , மகேஷ் ஷெர்லா 
சிறந்த பாடலாசிரியர் - மனோஜ் முண்டாஷிர்
சிறந்த இந்தி படம் - டூல்சிதாஸ் ஜூனியர்
குழந்தை நட்சத்திரம் சிறப்பு விருது - வருண் புத்ததேவ் 

கன்னடம்
சிறந்த கன்னட படம் - டோலு 
சிறந்த ஆடியோ வடிமைப்பு - ஜோபின் ஜெயன்