இந்திய திரை உலகின் ஈடுஇணையற்ற நடன இயக்குனராகவும் முன்னணி கமர்ஷியல் இயக்குனராகவும் நட்சத்திர கதாநாயகனாகவும் திகழும் பிரபுதேவா அவர்கள், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்திருக்கும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமான பஹீரா வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

முன்னதாக குழந்தைகள் கொண்டாடும் ஃபேண்டஸி அட்வென்ச்சர் திரைப்படமாக பிரபுதேவா நடித்துள்ள மை டியர் பூதம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது இதனை அடுத்து பிரபுதேவா நடிப்பில் ஃபிளாஷ்பேக், ரேக்ளா, முஸாஸிர் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் இயக்குனர் சந்தோஷ்.P.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் பொய்க்கால் குதிரை. பிரபுதேவாவுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், வரலக்ஷ்மி சரத்குமார்,, ஷ்யாம், ஜெகன், ரைசா வில்சன் மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் பொய்க்கால் குதிரை படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மினி ஸ்டூடியோ மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் பொய்க்கால் குதிரை படத்திற்கு பல்லு ஒளிப்பதிவில் டி.இமான் இசை அமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பொய்க்கால் குதிரை திரைப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், தற்போது பொய்க்கால் குதிரை படத்தின் ட்ரைலர் வெளியானது. அசத்தலான அந்த ட்ரைலர் இதோ…