இரும்பால ரெக்க செஞ்சி பறப்போமே....5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று !
By Aravind Selvam | Galatta | July 22, 2022 18:56 PM IST

சூர்யா நடிப்பில் இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படம் 2020 தீபாவளியை முன்னிட்டு அமேசான் ப்ரைம்மில் வெளியானது.
மோகன் பாபு,கருணாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.GV பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் பல திரைப்பட விழாக்களில் பல சிறப்பு அங்கீகாரங்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.பலரும் இந்த படத்தினை திரையரங்குகளில் மிஸ் செய்துவிட்டோமே என்று பெரிதும் ஏங்கி வந்தனர்.இந்த படம் தேசிய விருதுகளை அள்ளும் என பல ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
இன்று 2020-ல் வெளியான படங்களுக்கான 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.இதில் சிறந்த படம்,சிறந்த நடிகர்,சிறந்த நடிகை,சிறந்த திரைக்கதை,சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட 5 விருதுகளை சூரரைப் போற்று படம் அள்ளி நமது தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.ரசிகர்களும் பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Suriya's Soorarai Pottru gets honoured yet again - check out this amazing feat!
05/07/2022 06:14 PM
SAD NEWS: Soorarai Pottru and Karnan fame veteran actor Poo Ramu passes away!
27/06/2022 08:18 PM