சினிமா உலகில் சிறந்த நடிகர்களாகவும், நல்ல நண்பர்களாகவும் திகழ்பவர்கள் சதீஷ் மற்றும் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த காலத்திலிருந்தே சதீஷுடன் நல்ல நட்பு. மெரினா திரைப்படம் துவங்கி பல வெற்றி படங்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார் சதீஷ். இவர்களின் காம்போ திரையில் இணைந்தாலும், பொது நிகழ்ச்சிகளில் இணைந்தாலும் என்டர்டெயின்மென்டிற்கு பஞ்சம் இருக்காது. 

சமீபத்தில் இருவரும் சேர்ந்து கிரிக்கெட் வீரர் தங்கராசு நட்ராஜனுடன் வீடியோ காலில் உரையாடினர் ஐ.பி.எல் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட பந்துவீச்சாளர் யார்க்கர் புகழ் நட்ராஜனுக்கு தொலைபேசி வாயிலாக இன்பதிர்ச்சி தந்தனர். சதீஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்தால், படத்தை விட அதிக காமெடிகள் நிஜ வாழ்வில் கிடைக்கும். 

இந்நிலையில் சதீஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரின் இணைய பதிவுகள் வைரலாகி வருகிறது. லயோலா கல்லூரி நடத்திய கருத்து கணிப்பில், அழகான ஆண்கள் அதிகம் வசிக்கும் இடத்தை சேலம் பிடித்துள்ளதாம். சதீஷ் சென்னையில் செட்டில் ஆன பின் நடத்தப்பட்ட கருத்து கணிப்பே இது. அதனால் தான் சென்னை முதலிடம் பெறவில்லை என்று கமெண்ட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். 

இதற்கு பதில் கமெண்ட் செய்த சதீஷ், ரசிகர் ரசிகையர் யாரும் கடையடைப்பிலோ, போராட்டத்திலோ ஈடுபட வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார் சதீஷ். 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் SK ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் அறிமுகமாகிறார். வினய், யோகிபாபு, அருண் அலெக்சாண்டர், அர்ச்சனா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

டாக்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான் படத்தில் நடித்து  வருகிறார் SK. ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.