“உழைப்பாளர்களுக்காக ஓங்கி குரல் கொடுக்கும் திரைப்படம் அநீதி..” இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ உள்ளே..

வசந்த பாலனின் அநீதி திரைப்படம் குறித்து இயக்குனர் ஷங்கர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்- Director Shankar about Vasantha balan aneedhi | Galatta

தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்த பாலன். வெயில் படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அதை தொடர்ந்து அங்காடி தெரு, அரவாண், காவிய தலைவன், ஜெயில் போன்ற திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ஈர்த்துள்ளார். படத்திற்கு படம் சமூக கருத்துக்களையும் எளிய மக்களின் வாழ்வியலையும் கச்சிதமான  திரைக்கதையில் பேசும் இயக்குனர் வசந்த பாலனின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் அடுத்த திரைப்படம் ‘அநீதி’. அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநயாகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் வனிதா விஜயகுமார், நாடோடிகள் பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் எம். கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், வசந்த பாலன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எட்வீன் ஒளிப்பதிவு செய்ய ரவிகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளியான  முன்னோட்டம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அநீதி திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் ஷங்கர் அவர்கள் தனது எஸ் பிக்சர்ஸ் மூலம் வழங்குகிறார். வரும் ஜூலை 21 ம் தேதி வெளியாகவிருக்கும் அநீதி திரைப்படம் அதே நாளில் தெலுங்கில் ‘Blood & chocolate’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் அநீதி திரைப்படம் குறித்து

“ரொம்ப நல்லாருந்தது பிடிச்சது. அதனால் தான் எஸ் பிக்சர்ஸ் மூலமாக வழங்குகிறோம். இந்த‘அநீதி படம் ரொம்ப யதார்த்தமாகவும் அதே சமயம் த்ரில்லராகவும் புது கலவையாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள். அவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று உழைக்கும் வர்க்கத்துக்காக ஓங்கி குரல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். நமக்கு கீழே வேலை செய்பவர்களை எப்படி நடத்துகிறோம் என்று அனைவரையும் யோசிக்க வைக்கும் படம் இது. அந்த வகையில் வசந்தபாலன் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவருடைய அருமையான எழுத்தில், சிறப்பான இயக்கத்தில் நம்மைக் கண்கலங்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், கோபப்பட வைக்கிறார். இப்படி படம் நெடுக சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் படத்தொட கிளைமேக்ஸ் கவிதைத்தனமாக முடித்திருக்கிறார்.

அர்ஜுன் தாஸ், தனது தனித்தன்மையான நடிப்பால் கண்கலங்க மட்டுமல்ல, இந்த படத்தில் கதிகலங்கவும் வைத்திருக்கிறார். துஷாரா விஜயனும் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்தில் பலர் எதிர்பாராத கதாபாத்திரங்களாக இருந்தது.  ஒவ்வொரு தொழிலாளியும் பாரக்க வேண்டிய படம். அதே நேரத்தில் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் முதலாளிகளும் பார்க்க வேண்டிய படம் இது. இதை நான் இந்த படத்தில் உணர்ந்தேன்.” என்றார் இயக்குனர் ஷங்கர்.

பிரபல சின்னத்திரை நடிகர்கள் வீட்டில் கைவரிசை காட்டிய திருடன்.. அடுத்தடுத்து ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு... விவரம் உள்ளே..
சினிமா

பிரபல சின்னத்திரை நடிகர்கள் வீட்டில் கைவரிசை காட்டிய திருடன்.. அடுத்தடுத்து ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு... விவரம் உள்ளே..

பன்னாட்டு திரைப்பட மேடையில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா.. - விருதுகளை அள்ளிய 'கண்ணே கலைமானே’ திரைப்படம்..!
சினிமா

பன்னாட்டு திரைப்பட மேடையில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா.. - விருதுகளை அள்ளிய 'கண்ணே கலைமானே’ திரைப்படம்..!

“நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா..” ஆக்ஷனில் அதகளப்படுத்தும் ‘கிங் கான்’ ஷாருக் கான்.. – அட்லியின் ‘ஜவான்’ பட சிறப்பு முன்னோட்டம் இதோ..
சினிமா

“நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா..” ஆக்ஷனில் அதகளப்படுத்தும் ‘கிங் கான்’ ஷாருக் கான்.. – அட்லியின் ‘ஜவான்’ பட சிறப்பு முன்னோட்டம் இதோ..