விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தால் சீரியல் மூலம் சின்னத்திரையில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் ஆயிஷா.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.இதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மாயா சீரியலில் நடித்திருந்தார்.இதனையடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சத்யா தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விஷ்ணு.இதனை தொடர்ந்து சில படங்களிலும் நடித்து அசத்தி இருந்தார் விஷ்ணு.சில வருட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழில் வரும் சத்யா தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றாக இருப்பது சத்யா.

விஷ்ணு மற்றும் ஆயிஷா இருவரும் இணைந்து நடித்துவரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.குறிப்பாக ஆயிஷா ஆண்களின் ஹேர்ஸ்டைலுடன் நடித்தது ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் வைரல் ஆனது.வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் 750 எபிசோடுகளை கடந்து முதல் சீசனை நிறைவு செய்தது.

சில மாதங்களுக்கு முன்பு அதே கதையின் தொடர்ச்சியாக சில புதிய கதாபாத்திரங்களுடன் இந்த தொடரின் இரண்டாவது சீசன் சத்யா 2 ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது இந்த தொடரில் பிரபல சீரியல் நடிகை ஆர்த்தி ராம் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவரது என்ட்ரிக்கு பிறகு சீரியலில் திருப்பங்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

aarthi ram joins the cast of sathya 2 serial ayesha vishnu zee tamil