தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி.ரசிகர்களின் ரசனை அறிந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்புவார்கள்.பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்து விடும்.அப்படி விஜய் டிவியின் புதிய முயற்சியாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.பலர் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு செம என்டேர்டைன்மென்டை தருவதாகவும் ரசிகர்கள் பலர் மீம்ஸ்,வீடியோக்கள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த தொடரின் மூலம் பல காமெடியன்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக மாறியுள்ளனர்.

இதன் இரண்டாவது சீசன் லாக்டவுன் செம ஹிட் அடித்தது.இந்த இரண்டாவது சீசனில் பங்கேற்ற பலரும் ரசிகர்கள் மத்தியில் நட்சத்திரங்களாக வளர்ந்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.பொங்கல் முதல் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று நடுவர்களின் ஒருவரான வெங்கடேஷ் பட் ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளார்.இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

cook with comali season 3 to start telecast from pongal vijay tv venkatesh bhat