தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்மையான ஒன்றாக பல வருடங்களாக திகழ்ந்து வருவது சன் டிவி.இவர்களது வித்தியாசமான தொடர்களுக்கென்றும்,சீரியல்களுக்கென்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் செம ஹிட் சீரியல்களும் உள்ளன,புதிதாக ஒளிபரப்பானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் சீரியல்களும் உள்ளன.

அப்படி சன் டிவியில் பல புது சீரியல்கள் ஒளிபரப்பாகி பல நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளது.அப்படி சன் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல்களில் ஒன்று செவ்வந்தி.இந்த தொடரில் மகராசி தொடரில் முதலில் ஹீரோயினாக நடித்து அசத்திய திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார்.

பிரபல நடிகர் ராகவ் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த தொடர் கடந்த ஜூலை 11ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த தொடரில் தற்போது சிறப்பு வேடத்தில் கண்மணி தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷாம்பவி குருமூர்த்தி நடித்துள்ளார்.தமிழில் கண்மணி தொடரை அடுத்து இந்த தொடரில் இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தவிர தெலுங்கில் சாதனா தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்,சன் டிவியில் வரும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் அவ்வப்போது வந்து அசத்துகிறார்.