தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். முன்னதாக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்திருக்கும் லத்தி திரைப்படம் நிறைவடைந்து விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஷால், விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை லண்டனில் தொடங்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி.

விஷாலுடன் இணைந்து மிக முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க, கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு G.V.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்

மினி ஸ்டுடியோ தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN இந்தியா திரைப்படமாக தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை ஆகஸ்ட் 29-ஆம் தேதி மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

#MarkAntony First Look on Mark Antony’s Birthday🧨💣💥@VishalKOfficial @iam_SJSuryah @vinod_offl @gvprakash #SunilVarma 💥see you tomorrow at 11:11 am🤝 pic.twitter.com/QFYlxbUA0R

— Adhik Ravichandran (@Adhikravi) August 28, 2022