"உலகநாயகன் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் சிலம்பரசன்TR!"- STR48 இயக்குனர் இவர் தான்... அட்டகாசமான அறிவிப்போடு வந்த மிரட்டலான வீடியோ இதோ!

கமல்ஹாசன் நடிப்பில் சிலம்பரசன்TR நடிக்கும் STR48,Silambarasan tr in str48 produced by kamal haasan directed by desingh periyasamy | Galatta

தனக்கென தனி பாணியில் தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சிலம்பரசன்.TR-க்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. எத்தனை எத்தனை வெற்றிகள் கண்டாலும் எவ்வளவு பெரிய தோல்விகள் கண்டாலும் ரசிகர்கள், சிலம்பரசன்.TRஐ விட்டுக் கொடுக்கவில்லை. நடிகர் சிலம்பரசன்.TRம் தனது ரசிகர்களை ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை. உடல் பருமனான தோற்றத்தில் அடுத்தடுத்து சில தோல்வி படங்களால் நிறைய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த போதும், கடின உழைப்பால்… விடாமுயற்சியால் தனது எடையை பாதியாக குறைத்து யாரும் எதிர்பாக்காத வகையில் மிகப்பெரிய கம்பேக் கொடுத்த சிலம்பரசன்.TR மாநாடு திரைப்படத்தில் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து தான் எப்போதும் விழா நாயகன் என்பதை நிரூபித்தார்.

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கடைசியாக சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்த தணிந்தது காடு திரைப்படமும் மெகா ஹிட் பிளாக் பஸ்டர் ஆனது. முன்னதாக சில்லுனு ஒரு காதல் & நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மஃப்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக, திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பத்து தல படத்தின் ட்ரெய்லருக்காக மிகுந்த ஆவலோடு அனைவரும் காத்திருக்கும் நிலையில் அடுத்த ஓரிரு தினங்களில் ட்ரெய்லர் வெயாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தனது அடுத்த திரைப்படமாக சிலம்பரசன்.TR நடிக்கும் STR48 திரைப்படத்தின் அறிவிப்பும் பெரும் எதிர்பார்த்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா & ஜூங்கா ஆகிய படங்களின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் திரைப்படத்தில் சிலம்பரசன்.TR நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், தமீபத்தில்கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் அடுத்த படத்தில் சிலம்பரசன்.TR நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக #STR48 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வந்துள்ளது.

எதிர்பார்த்தபடியே சிலம்பரசன்TRன் திரைப்பயணத்தில் 48வது திரைப்படமாக தயாராகும் STR48 திரைப்படத்தை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார். உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமால் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் STR48 படத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அறிவிக்கும் வகையில் மிரட்டலான ப்ரோமோ வீடியோவும் வெளியானது. அட்டகாசமான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

Dreams do come true 😇#STR48#Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #BLOODandBATTLE #RKFI56_STR48@ikamalhaasan @SilambarasanTR_ @desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/QxdCkUPFo9

— Silambarasan TR (@SilambarasanTR_) March 9, 2023

சினிமா

"இளைய நிலா பொழிகிறதே" பாடலின் கிட்டாரிஸ்ட்டாக மனம் கவர்ந்த பிரபல இசை கலைஞர் திடீரென காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்

சீக்கிரமா வந்துரும்... விடுதலை இசை வெளியீட்டு விழாவில் வட சென்னை 2 குறித்து அதிரடியாக பேசிய விஜய் சேதுபதி! விவரம் உள்ளே
சினிமா

சீக்கிரமா வந்துரும்... விடுதலை இசை வெளியீட்டு விழாவில் வட சென்னை 2 குறித்து அதிரடியாக பேசிய விஜய் சேதுபதி! விவரம் உள்ளே

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் அட்டகாசமான டாடா... ரசிகர்கள் எதிர்பார்த்த OTT ரிலீஸ் அறிவிப்பு இதோ!
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் அட்டகாசமான டாடா... ரசிகர்கள் எதிர்பார்த்த OTT ரிலீஸ் அறிவிப்பு இதோ!